சம்மாந்துறையைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினோஜ் குமாருக்கு கிடைத்த அரச கௌரவம்.

தம்பிராஜ் சகாதேவராஜா.

சம்மாந்துறை கோரக்கர் கோயில் பிரதேசத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ் குமார் என்ற மாணவருக்கு இலங்கையின் கண்டுபிடிப்பாளர் என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பண்டார்நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவினால் குறிந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்திலும், சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லுாரியிலும் பயின்ற இவர் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தொழில்நுட்ப பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவருக்கு அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சி மேற்கொள்ளல், இலவச அரச போக்குவரத்து வசதிகள், இலவச மருத்துவ சேவை, உள்நாட்டு-வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி போட்டிகளில் பங்குபற்றும் வசதிகள் மற்றும் கண்டுபிடிப்புக்களை வர்த்தகமயப்படுத்துவதற்கான வசதிகள் என அனைத்தும் செய்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும், தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment