இலங்கையில் பாம்புக் கடியால் ஆண்டுதோறும் 400 பேர் வரை உயிரிழப்பதாக தகவல்.


இலங்கையில் பாம்புக் கடி காரணமாக ஆண்டுதோறும் 400 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.  களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலேயே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இதேவேளை, வருடமொன்றுக்கு பாம்புக் கடி காரணமாக, 80,000 பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், அதில் 400 பேர் வரை மரணத்தை சந்திப்பதாகவும் கூறப்படுகின்றது. 

இது குறித்து பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் களன மாதுவகே கருத்து தெரிவித்த போது, முன்னர் பாம்புக் கடி காரணமாக வருடமொன்றுக்கு 40,000 பேர் வரை மாத்திரமே பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார். 

ஆனால், தற்போது இந்த தொகை 80,000 பேர் வரை அதிகரித்துள்ளதாவும் இது பாரிய அதிகரிப்பென்று அவர் கூறினார் என, பிபிசி செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

கிராமிய பகுதிகளில் வசிக்கும் மக்களே பாரிய அளவில் பாம்புக் கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அதிலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கூடுதலாக பாம்புக் கடிகளுக்கு ஆளாகின்றதாக கூறிய பேராசிரியர் களன மாதுவகே பாம்புக் கடி ஏற்பட்டதுடன் சிகிச்சை பெற தாமதம் ஏற்படுத்துவதன் காரணமாக பெரும் எண்ணிக்கையில் இறப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறினார். 

பாம்புக் கடி ஏற்பட்டதுடன் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் எமது மக்கள் தாமதம் காண்பித்து வருவதாகவும் இதன் மூலம் விஷம் உடல் முழுவதும் பரவுவதன் காரணமாகவே உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே பாம்புக் கடி ஏற்பட்டதுடன் பாதிக்கப்பட்ட நபரை தகுந்த சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இது குறித்து பொது மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேலும் வேண்டுகோள் விடுத்தார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment