இலங்கை கிரிக்கெட் ரசிகனின் ஆதங்கம். ?

ABM - அசீம்.

இலங்கையணி இப்போது தோற்பது வாடிக்கையாகிவிட்டது.ஆனால் அவர்கள் தோற்கும்விதம் ரசிகர்களிடத்தில் மிகுந்த கோபத்தையும் ,ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது .கடந்த 2 வருடத்துக்கு முன்வரை பல வெற்றிகளுக்கும் ,சாதனைகளுக்கும் சொந்தமான அணியின் தற்போதைய நிலையைக் கண்டு கிரிக்கெட் உலகே நகைக்கிறது...  என்ன சாதி கிரிக்கெட் அணிடா என்று.... வெட்கித்தலை குனியவேண்டிய நிலைக்கு இலங்கையணி  ஆளாகிவிட்டது.. 

இவர்களின் பார்வையில் கிரிக்கெட்  விளையாடுவதைக்கூட கல்விக்கூடம் நடத்தி பேப்பரில் குறிப்பெழுதி  மனப்பாடம் செய்து மைதானத்துக்கு அனுப்பவேண்டும்போல.

இதுவொரு  விளையாட்டுதானே.இதைக்கூட டாக்டர் ,எஞ்சினியர்  படிப்புத் தரத்துக்கு  கஸ்டமாக்கி வைத்துள்ளார்கள். 

அணிக்கு  வருகின்ற  புதுவீரர்கள்  அப்படித்தான் என்றால்  ,அனுபவ வீரர்களென்று   7,8 வருசமா விளையாடுபவர்களும்  புதுசுகளைவிட மோசமாக  விளையாடுவது ரசிகர்களிடத்தில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. .

மற்ற நாட்டு கிரிக்கெட் அணியினர்  என்ன அழகாக  விளையாடுகின்றனர். அவர்களுடைய  அனுபவ வீரர்கள் ,புதுமுக வீரர்கள் என சகலரும்  கலக்குகின்றனர். இத்தனைக்கும்  கிரிக்கட்டில் கலாநிதிப் பட்டம் முடிச்சு வந்தவர்களா? இல்லையே ! அல்லது இலங்கை கிரிக்கெட் நிருவாகத்தினர் தோற்கும்போதெல்லாம் வழக்கமாக ஒன்று சொல்வார்களே ,எங்கள் அணி அனுபவற்ற வீரர்களைக் கொண்டதென்று.இப்படியாவது சொல்வதுண்டா ?

 இல்லை.இலங்கை வீரர்களைப்   போலவே    கீழ்நிலை படிகளில் திறமையாக  விளையாடி மேலே வந்தவர்கள். எனினும் அவர்களால் சிறப்பாக விளையாட முடிகிறது.இலங்கை வீரர்களால் முடியவில்லை.

ச்சே....இனியும் இந்த வீரர்களை வைத்துக்கொண்டு இலங்கை வெற்றி பெறும் என்பதில் ரசிகர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.இப்படியே தொடர்ந்தால்  இலங்கை கிரிக்கெட்டுக்கு முடிவுரை எழுதவேண்டி ஏற்படலாம்

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment