கற்பதுமில்லை வாசிப்பதுமில்லை அறிவு மட்டும் எப்படி வரும்..???

ABM. அசீம்.

வாசிப்பதென்றால் பலருக்கு மருந்துமாத்திரை குடிப்பதைவிடக் கசக்கிறது. எத்தனையோ அறிவுபூர்வமான பதிவுகள் முகநூலில் நம் கண்களுக்குத் தெரிந்தாலும் வாசிப்பதிலுள்ள பொடுபோக்குத்தனத்தால் ஓரிரு வரிகளை மட்டும் படித்துவிட்டுப் பூரணமாக வாசித்ததுபோல் அருமை, சூப்பர், சிறப்பு என்ற ஒற்றை வார்த்தைக்குள் பின்னூட்டமிட்டுப் பதிவாளரைத் திருப்திப்படுத்துகிறோம்.

இது வாசிப்பின் மீதான எமது வறட்சிநிலையின் வெளிப்பாடு ஏன் எம்மால் பொறுமையாக இருந்து குறைந்தபட்சம் முழுநீளப் பந்தியை வாசிக்க முடியாமலுள்ளது.? 

ஒருமுறை இஸ்ரேலியப் பத்திரிக்கையொன்று இராணுவ இரகசியங்களைச் செய்தியாக வெளியிட்டது. இதனையறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பத்திரிக்கைமீது விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் சொன்னபதில் "முஸ்லிம்கள்_வாசிப்பதில்லை" இதனால் அவர்கள் இதை அறியமாட்டார்கள் என்று கூறியது.

இதில் நிறைய உண்மை இருக்கிறது. எமது சமூகம் - அது இலங்கையில் இருந்தாலென்ன? அமெரிக்காவில் இருந்தாலென்ன ? - பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளது. இதை நாம் மாற்றிக் கொண்டாலன்றி ஒரு போதும் வெற்றிபெற முடியாது. எந்தச் சமூகமும் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை - அல்லாஹ்வும் அந்தச் சமூகத்தை மாற்றுவதில்லை !

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment