18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.

புதுடெல்லி:

குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் இந்திய மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும் நாடு முழுவதும் குழந்தைகள் திருமணங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன. தகவல் கிடைத்து உரிய நேரத்தில் தடுக்கப்படும் சிறுமிகள் போலீசாரால் மீட்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், சுமார் 15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளை திருமணம் செய்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமை குற்றமாகவே கருதப்படும். திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் கணவன் மீது மனைவி புகார் அளித்தால் அதுவும் வன்கொடுமையாக கருதப்படும். 18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது சட்ட விரோதம் அல்ல என்ற ஷரத்து நீக்கப்படுகிறது, என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment