தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் தமிழ்மொழியே சிறந்த மொழியாகும்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தமிழ்மொழியே சிறந்த மொழியாக அன்றும் இன்றும் விளங்குகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மொழி என்பது மக்களை பிரிப்பதற்காக அன்றி, மக்களை ஒன்றுசேர்க்கும் பாலமாகவே இருக்கவேண்டும். ஆனால் சிலர் மொழியை பயன்படுத்தி மக்களை பிரிக்க பார்க்கின்றார்கள். தமிழ், சிங்கள மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த மொழிகள். நாங்கள் பேசுகின்ற இந்த இரு மொழிகளிலும், ஒரே விதமான வார்த்தைகள் பல இருக்கின்றன.எல்லா மதங்களிலும் ஒற்றுபடுங்கள், ஒன்றுபடுங்கள் என்றுதான் கூறப்படுகிறது. எனவே மொழியையும் மதத்தையும் காரணமாகக் கொண்டு எம் மத்தியில் பேதங்களை ஏற்படுத்தி, சமூகங்களை கூறுபோடக் கூடாது. அப்படி பிரிந்தால் அது முன்னேற்றம் அடைந்த ஒரு சமூகத்தின் இலட்சணமாக அமையாது. முன்னேற்றம் அடையாத ஒரு சமூகத்தின் இலட்சணமாகவே கருதப்படும்” என்றார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment