அம்பாறை மாவட்ட தொலைக்காட்சி செய்தியாளர் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு.

(எம்.எம்.ஜபீர்)

அம்பாறை மாவட்ட தொலைக்காட்சி செய்தியாளர் அமைப்பின் அங்குரார்ப்பண அம்பாறை மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் கலாபூசணம் மீரா இஸ்ஸடீன் ஏற்பாட்டில் நிந்தவூர் இ.எப்.சி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறுபட்ட ஊடக அமைப்புக்கள் அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டுவருகின்ற போதிலும் இதுவரையில் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான அமைப்பு உருவாக்கப்படாத நிலை காணப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி செய்தியாளர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் செய்தியாளர்களின் சேவையை விரிவுபடுத்துவதை நோக்காக கொண்டே இவ்அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட  அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்  கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதன் பின்னர் அமைப்பிற்கான நிருவாக தெரிவும் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவராக யூ.எல்.எம்.றியாஸ், செயலாளராக ஆர்.தில்லைநாயகம், பொருளாளராக ஏ.எம்.எம்.றியாத், உப தலைவராக எஸ்.எம்.அறூஸ், உபசெயலாளராக எம்.எம்.ஜபீர், ஊடக இணைப்பாளராக ஏ.எஸ்.எம்.முஜாஹித் ஆலோசகர்களாக சிரேஸ்ட ஊடகவியராளர்களான மீரா எஸ்.இஸ்ஸடீன், எம்.ஏ.பகுர்தீன் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதியில் அனைவரும் எழுந்து நின்று ஒன்றாக இணைந்து கைகோர்த்து ஒற்றுமையுடன் செயற்படுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டமை சிறப்பம்சமாக அமைந்தது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment