மீன் வாங்கும் போது தரமான மீன்களை எப்படி பார்த்து வாங்குவது...??

மீனை வாங்கும்போது அது நல்ல மீனா?… இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது? மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது.

ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்…

இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்…
அவை என்னென்ன?…

மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்…

தரமான மீன்கள் என்றால்…

1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும்.

2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும்.

3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.

4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.

5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.

6)மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.

7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.

தரம் குறைந்த மீன்கள் என்றால்..

1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.

2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.

3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.

4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.

6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.

7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.

என்ன மக்களே… தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா?…
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment