அம்பாரை மாவட்ட நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் திடீர் மினிச் சூறாவளி.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்க் கடற்கரைப் பிரதசத்தில் இன்று காலை மழையுடன் கூடிய  திடீர் மினிச் சூறாவளி வீசியுள்ளதால், அப்பிரதேச மீனவர்களும், அவர்களது குடியிருப்புக்களும்( வாடிகளும் ) வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மினிச் சூறாவளியினால் 100 மீனவர்களுக்குச் சொந்தமான அல்-மினா கரைவலை மீனவர் சங்க மீனவர் குடியிருப்பும் (வாடி)யும், அவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் முற்று முழுதாகச் சேதமடைந்துள்ளது.  இதனால் தமது தொழிலைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையிலிருந்து வானம் மப்பும், மந்தாரமுமாகக் காட்சியளிப்பதோடு, தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருக்கிறது. 

இம்மினிச் சூறாவளி காலை 11.30 மணியளவில் நிந்தவூர் 8ம், 9ம் பிரிவுக் கடற்கரைப் பிரதேசத்தை மட்டுமே தாக்கியுள்ளது. ஏனைய பிரதேசங்களுக்கு இதன் தாக்கம் உணரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருக்கிறது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment