அகில இலங்கை ரீதியிலான போட்டியில் 2ம்,3ம், இடத்தில் சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலை மாணவன்.

சாஜித் அலி

விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியிலான நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சம்மாந்துறை அல் - அர்சத் மகா வித்தியாலய மாணவன் எம்.ஐ.எம். முஜிப் பங்கேற்றிருந்தார்.

அகில இலங்கை ரீதியிலான நடைபெற்ற விளையாட்டு போட்டி இம்மாதம் கடந்த 17ம் திகதி ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது இதில் உயரம் பாய்தல் போட்டியில் அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும். தட்டறிதல்(பரிவட்டம்) போட்டியில் அகில இலங்கை மட்டத்தில் 3ம் இடத்தினையும். 2ம் இடத்துக்காக 15.000 ரூபாவினையும் 3ம் இடத்திற்க்காக 10.000 ரூபாயினையும் காசோலையாக முஜிப் பெற்றுக்கொண்டுள்ளார். 

இதற்கு முன்னரும் முஜிப் பரிவட்டம் 200 m மற்றும் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரைப்பயிற்றுவித்து ஊக்குவித்த விசேட தேவையுள்ள மாணவ பிரிவு பொறுப்பாளரான ஆசிரியர் எம்.ஐ.எம்.றியாத் ஆசிரியருக்கும். மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய ஏ.எல். மஜீட் அதிபர் அவர்களுக்கும் சம்மாந்துறை வளயகல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.



Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment