விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான போட்டிக்கு சம்மாந்துறை அல் அர்ஷத் பாடசாலை மாணவன் தெரிவு.

காரைதீவு சகா.

விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக சம்மாந்துறை அல் அர்சர் மகா வித்தியாலய மாணவன் எம்.ஜ.எம்.முஜீப் தெரிவு செய்யப்பட்டு போட்டியில் கலந்து கொண்டார்.

அகில இலங்கை ரீதியலான போட்டி கடந்த (17) வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை மஹிந்தராஜபக்ச மைதானத்தில் நடைபெற்றது.

மாணவன் முஜிப் பரீதி வட்டம் 200மீற்றர் ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல் நிகழ்ச்சிகளில் மாவட்டரீதியில் முதலிடம் பெற்று கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தார்.

இவரைப்பயிற்று வித்த விசேடதேவையுள்ள மாணவர் பிரிவு பொறுப்பாளர் ஆசிரியர் எம்.ஜ.எம்.றியாத் மற்றும் பாடசாலை அதிபரி ஏ.எல்.அப்துல்மஜீட் ஆகியோர் நேற்று மாணவனைப் பாராட்டி வழியனுப்பிவைத்தனர்.

சாதனை மாணவனுக்க சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment