காவாலிகளின் ஓய்விடமாக மாறியுள்ள சம்மாந்துறை அஸ்ஸமா பாடசாலை கட்டிடம் எப்போது முடிவுறும்..??

தகவல் - L.A. Mohammad

சம்மாந்துறை மலையடிக்கிராம் 04 ம் பிரிவில் அமைந்திருக்கும் கமு சது அஸ் ஸமா பாடசாலையில் தரம் ஒன்பது வரைக்கும் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள் இருந்த போதிலும் போதிய கட்டிடங்கள்,வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருந்த போது உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு கட்டிடம் நிர்மானிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது ஆனால் குறித்த அந்த கட்டிடமானது சுமார் இரண்டு வருடமாக முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் கவனிப்பார் அற்ற நிலையில் கானப்படுவது மிகவும் வேதனை அளிப்பதாக அப்பாடசாலை மாணவர்களும்-பிரதேசவாசிகளும் கவலை தெரிவிக்கின்றார்கள்.

இந்த கட்டிடம் இரவில் காவாலிகளின் ஓய்விடமாகவும் அதுமட்டுமல்லாமல் மதுபான போத்தல்களின் ஸ்டோராகவும் கானப்படுகின்றது. இந்த கட்டடத்தை பூர்த்தி செய்து தரும்படி சம்மாந்துறை வலயக்கல்வி பனிமனையில் கூறிய போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா...???

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment