சம்மாந்துறை தேசிய பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களுக்குமான அறிவித்தல்.

தகவல் - SWDC ஊடகப் பிரிவு.

அன்பார்ந்த சகோதரர்களே, எமது ஊர் கல்வித்துறையின் மறுமலர்ச்சியின் 
ஓர் அங்கமாகவும், நமது நீண்ட நாள் கனவாகவும் இருந்த எம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களை மீண்டும் ஒன்றுகூட்டும் நிகழ்வும் அதன் நிருவாகத் தெரிவும் இன்ஷா அல்லாஹ். 2017/11/18  சனிக்கிழமை) காலை 09:00 மணியளவில், அப்துல் மஜீத் மண்டபத்தில் (நகர மண்டபத்தில்) பாடசாலையின் அதிபர் A.C.M.இஸ்மாயில், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களினால் ஏற்பாடாகியுள்ளதையிட்டு பழைய மாணவர்களென்ற ரீதியில் பெருமிதமடைகின்றோம்.     

ஒரு பாடசாலையின் அபிவிருத்தியிலும் அதன் தரத்தினை மெருகூட்டுவதில் பழைய மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாத வொன்று. அவர்களே அந்தப்பாடசாலையின் ஆணிவேர். எனவே நீண்ட இடை வேளைக்குப்பின் மீண்டும் புனர்நிர்மானமாகின்ற இந்த பாடசாலையின் பழைய மாணவ அமைப்புபெயரளவில் இயங்காது ஆக்கபூர்வமானதாக அமையவேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.  

எனவே இந்தக்கட்டமைப்பு நீண்ட ஆயுள் கொண்டதாக அமைவதற்கு அதன் நிருவாக அங்கத்தவர்கள், 

1.0 தூரநோக்குடைய சமூக சிந்தனை கொண்டவராக இருத்தல் 
2.0 நடுநிலை சிந்தனை போக்குடையவராக இருத்தல் , 
3.0 கூலியை இறைவனிடம் மாத்திரம் எதிர்பார்க்கும் தன்மை கொண்டிருத்தல், 
4.0 அரசியல் பக்கசார்பு இல்லாதவராய் இருத்தல் வேண்டும்.
5.0 அடுத்தவரின் கருத்துக்கு செவிமடுப்பவராக இருத்தல்
6.0 மஷூரா முடிவை அல்லாஹ்வின் முடிவாக ஏற்பவராக இருத்தல்
7.0 தனது பொறுப்பை அல்லாஹ்வுக்காக அழகிய முறையில் செய்து முடிப்பவராக இருத்தல்


போன்ற பண்புகளைகளோடு இருப்பதுவே சாலச்சிறந்தது. இவர்களே நீண்ட தூரம் பயணிப்பவர்கள்.

எனவே கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு தூய எண்ணத்தில் பயணிக்க விரும்புகின்ற அனைத்து சம்மாந்துறை தேசிய பாடசாலை பழைய மாணவர்களும்  வருகைதந்து நமது பாடசாலை அபிவிருத்தியில் அக்கறையுள்ள தகுதியான நிருவாகத்தினை தெரிவு செய்து எமது பாடசாலையினை கட்டி எழுப்புவதோடு சிறந்த  சமூகத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு Sammanthurai Welfare & Development Council (SWDC) எமது ஊர் தேசிய பாடசாலை பழைய மாணவர்களை வேண்டிக்கொள்கிறது. 

அத்தோடு SWDC இன் கல்விப்பிரிவு சம்மாந்துரையின் கல்வி மேம்பாட்டுக்கு எப்போதும்  உறுதுணையாக இருக்கும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment