சாக்கடையாக இருந்த சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம் பூக்கடையாக மாறியுள்ளது.


அண்மையில் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தில் கட்சிகள் சார்பாகவும், தனிப்பட்ட நபர்கள் சார்பாகவும் பல வகையான கட்டவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மணிக்கூட்டுக் கோபுர அழகை கெடுத்துக் கொண்டிருந்ததனை அவதானித்த பொதுமக்கள் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள் இதனை முகநுால் வாயிலாகவும் பலரும் காரசாரமாக விமர்சனம் செய்திருந்தனர்.

இதனை அடுத்து சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தி மணிக்கூட்டுக் கோபுரத்தை அழகுபடுத்த அதில் பொருத்தப்பட்டுள்ள கட்டவுட்களை அகற்றுமாறு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக பொலிசாரின் தீவிர நடவடிக்கை மூலம் பிரதேச சபையின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

இதற்கு அமைவாக சென்ற 2017-11-03ம் திகதி வெள்ளிக்கிழமை மணிக்கூட்டு கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த உருவப்படங்கள், கட்டவுட்கள் என அனைத்தும் அகற்றப்பட்டு மணிக்கூட்டுக் கோபுரம் துாய்மைப்படுத்தப்பட்டது.

சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரத்தினை அழகுபடுத்தும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி அழகிய பூக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை செயலாளர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment