12ஆம் கொளனி மையவாடி வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுவதற்கான வேலைத்திட்டம்.

(எம்.எம்.ஜபீர்)

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் 15 இலட்சம்  ரூபாய் செலவில் கீழுள்ள  சாளம்பைக்கேணி-03, 12ஆம் கொளனி மையவாடி வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுவதற்கான வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட் தலைமையில் நடைபெற்ற பெற்ற  நிகழ்வில் சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம் ஆகிய பிரதேச செயலக அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஏ.ஹஸன் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம் ஆகிய பிரதேச செயலக அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஏ.ஹஸன் அலியின்  இணைப்பாளர்களான  எம்.எம்.எம்.சமூன், யூ.எல்.றசீட், எம்.எல்.சுலைமாலெப்பை, சாளம்பைக்கேணி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.சீ.அன்வர், நூராணியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜெ.செயின், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் குன்றும் குழியுமாக காணப்பட்ட இவ்வீதி செப்பனிடப்படுவதன் காரணமாக பிரதேசத்திலுள்ள  குடும்பங்களும், விவசாயிகளும் நன்மையடையவுள்ளனர்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment