ஐ.தே.க சம்மாந்துறை அமைப்பாளர் ஹசன் அலியினால் 700 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள்.

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலியின் முயற்சியினால் சம்மாந்துறை பிரதேசத்தில் 700 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை விவசாய திணைக்கள மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஏ. ஹஸன் அலி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம். ஹனீபா,  ஐ.தே.க. தொகுதி இணைப்பாளர் சமூன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைப்பாளர் ஹஸன் அலியின் வேண்டுகோளுக்கினங்க பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்காவினால் இந்த தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment