சம்மாந்துறை வைத்தியசாலை A தரமுயர்த்தப்பட்டதை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை சுகாதாரபோசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் வைத்தியசாலை ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டதை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு பிரிவு கட்டிட திறப்பு விழாவும் நேற்று இடம் பெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் றோஹித்த போகொல்லாகம, சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைசல் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.





Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment