சம்மாந்துறை மக்களின் பல நாள் கனவு; சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை Type - A ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பிர் கெளரவ எம்.ஐ.எம் மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ மாஹிர் ஆகியோரின் தொடர்ச்சியான பல கட்ட முயறச்சியின் பயனாகவும், மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை நலன்புரி அமைப்பு என்பன மேற்கொண்ட வேண்டுகோளின் பிரகாரமும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அவர்களினது உதவியினால் BH Type "B"யாக இருந்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தற்போது Type "A" யாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்தின தலமையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பிரதி பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்குபற்றலுடன் நடைபெற்ற கூட்டத்தில் சம்மாந்துரை ஆதார வைத்தியசாலையை BH Type "A" தமுயர்த்த அனுமதி வழங்கப்பட்டு இன்று அதற்கான சகல ஆவனங்ளும் சுகாதார பிரதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment