சம்மாந்துறை பிரதேசத்தில் 1000 குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

(எம்.எம். ஜபீர்)

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் திவிமகட கப்புறுக திட்டத்தின் கீழ்  அம்பாரை பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபையினால் சம்மாந்துறை பிரதேசத்தில் 1000 குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை முஅல்லா பள்ளிவாசல் வளாகத்தில்  நடைபெற்றது.

தென்னை பயிர்செய்கை சபையின் அம்பாரை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.ஐ.சுசந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் தென்னங் கன்றுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தென்னை பயிர்செய்கை சபையின் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கே.எஸ்.ஆர்.சம்பத், தென்னை பயிர்செய்கை சபையின் சம்மாந்துறை உப அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஐ.எல்.சனீர், எம்.ஐ.பஸ்லியா, ரீ.எல்.றிஸ்வானா, ஆர்.பிரியதர்சினி, ஏ.எல்.ஜூமானா பேகம் உள்ளிட்ட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

குறுகிய காலங்களில் காய்க்கும் தென்னை மரங்களை வழங்கி வீட்டுத்தோட்டங்களில் நடுவதன் மூலம் தேங்காய்  உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டை முழுமையாக ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment