சம்மாந்துறை நகரசபையானால் மல்வத்தை பிரதேச சபையாக வேண்டும்.

(காரைதீவு குறூப் நிருபர் - சகா)
மல்வத்தை பிரதேச சமுக அபிவிருத்தி அமைப்பு கோரிக்கை
1968 ஆம் ஆண்டுகாலம் முதல் 1987 ஆம் ஆண்டு காலம் வரை இயங்கி வந்த மல்வத்தை கிராம சபையை மீள மல்வத்தை பிரதேசசபையாக அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மல்வத்தை பிரதேச சமுக அபிவிருத்தி அமைப்புகளின் ஒன்றியம் இதற்கான மனுவை, புதிய பிரதேசசபை ஸ்தாபிக்கும் சபையின் தலைவரும் அம்பாறை அரச அதிபருமான துசித பி வணிக சிங்கவிடம் நேற்று முன் தினம் கையளித்தது.
அமைப்பின் தலைவர் பி. நடராஜா செயலாளர் வி. ஜெயச்சந்திரன்  உபதலைவர் காந்தன் உள்ளிட்டோர் அதனைக் கையளித்தனர்.
இது தொடர்பில் காந்தன் கருத்துரைக்கையில்:
1968 முதல் 1987 வரை தனியான இயங்கி வந்த பழம்பெரும் மல்வத்தை கிராமசபை 1987 முதல் அரசின் சட்டப்படி சம்மாந்துறை பிரதேசசபைக்குள் உள்ளீர்க்கப்பட்டது.
அதாவது  தற்சமயம் மல்வத்தைப் பிராந்தியம் சம்மாந்துறை பிரதேசசபைக்குள் இருக்கிறது. எனினும் தற்போது சம்மாந்துறை பிரதேசசபையை நகர சபையாக்கும் முயற்சி நடைபெற்றுவருவதனால் புதிய பிரதேசசபையொன்று அமையும்.
அதனை மல்வத்தையை மையாமாகக் கொண்ட மல்வத்தை பிரதேச சபை அமைய வேண்டுமென்பதே எமது அன்பான வேண்டுகோளாகும்.
சம்மாந்துறையை நகரசபையாக்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. அதற்கு எமது பரிபூரண ஆதரவை வழங்குகின்றோம்.
அதே வேளை புதிய மல்வத்தை பிரதேசசபையானது எமது அறிக்கையிலுள்ளவாறு மூவினமக்களும் வரக்கூடியவாறு அமையவேண்டும்.

நாம் இல்லாத ஒன்றைக் கேட்கவில்லை. ஏலவே இருந்த பழம்பெரும் சபையையே கேட்கின்றோம். உண்மையில் அந்தக் காலத்தில், அதாவது 1968 முதல் 1987 வரை மல்வத்தை கிராமசபை இயங்கிவந்தது.
அந்த பழம்பெரும் சபையை மீண்டும் இந்தச்சந்தர்ப்பத்தில் உருவாக்கித் தரவேண்டும் என்பதே எமது அவா என்றார்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment