அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக அட்டாளைச்சேனை ஏ.எல்.அன்வர் அவர்கள் நியமனம்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எல்.அன்வர் (SLPS), B.Ed (Hons)Trained அவர்கள் அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் அட்டாளைச்சேனை  அக்/ஸஹ்றா வித்தியாலயம், மற்றும் அக்/அட்டாளைச்சேனை தேசியபாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராகவும்  கொழும்பு / ஹமீட் அல்-ஹுஷைனி மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளதுடன் அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஷஹ்றா வித்தியாலயத்தைப் பொறுப்பேற்று தனது நிருவாகத் திறமையின் காரணமாக அவ்வூரில் பெயர் சொல்லும் பாடசாலையாக உயர்த்திக் காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment