சம்மாந்துறைக்கு நிரந்தர பஸ் தரிப்பு நிலையத்தின் அவசியம். (Bus Terminal)

மாஹிர் மொஹிடீன்.

சம்மாந்துறையின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமானதும் நமது ஊரை அடுத்த தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் காலதாமதமின்றி உடனே ஒரு நிரந்தர பஸ் தரிப்பு நிலையம் (Bus Terminal) இங்கே அமைக்கப்படவேண்டும்.

நமக்கு ஒரு பஸ் தரிப்பு நிலையம் (Bus Terminal) அவசியமா ? என்று சிலர் கேட்கலாம். அதற்கு உரிய பதிலைக் கீழே பார்ப்போம்.

பொருளாதார நன்மைகள்:

1) ஒரு சில பேருக்கு நிரந்தரத் தொழில் வாய்ப்பளிக்க முடியும்.

2) பக்கத்து ஊர்களிலிருந்து நமது ஊருக்கு நேரடியான பஸ் போக்குவரத்து சேவைகளை அதிகரிக்கும் போது அயல் ஊர்களில் உள்ளோர் நமது ஊருக்கு அதிகளவில் வரும்போது நமது வியாபாரங்களை அதிகரிக்கலாம். அதாவது அவர்களுக்கு நமது பொருட்களை விற்கலாம்.

3) நமது ஊரில் உள்ள அரசாங்க, பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் வெளி ஊரவர்கள் கூடுதலாக வந்து படிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

4) நமது ஊர் பெரிய பரப்பளவில் உள்ளதால் நிறைய உள்ளூர் பஸ் சேவைகளையும் ஆரம்பிக்க முடியும்.இதனால் மலை அடிவாரங்களிலும் செந்நெல்புரம் போன்ற ஏனைய தூர இடங்களில் வசிக்கும் வசதி குறைந்தவர்கள் இலகுவாக வைத்தியசாலை, சந்தைகள் வாசிகசாலை மற்றும் அவர்களுக்குத்தேவையான ஏனைய இடங்களுக்கும் இலகுவாக போக்கு வரத்து செய்யக்கூடியதாக இருக்கும்.

5) இலங்கையில் பொருளாதாரத்தில் முன்னேறிய எந்த ஊரை நீங்கள் பார்த்தாலும் அங்கே ஒரு நிரந்தர பஸ் நிலையத்தைப் பார்ப்பீர்கள்.

நமது ஊரின் சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்க்கும் போது நமது ஊரில் கப்பல்கள் வந்து தரித்து நின்ற "துறை" என்று படிக்கின்றோம். அப்படிபட்ட நமதூருக்கு இன்றைய காலகட்டத்தில் அர்த்தம் சேர்க்க வேண்டுமென்றால் நாம் பஸ்கள் வந்து தரிக்கின்ற ஒரு "துறை" (Terminal) அமைத்தால் தான் நமது ஊரின் பெயருக்கு ஒரு அர்த்தம் சேர்க்கும் என்றால் அது மிகையாகாது.

சிலர் சொல்கின்றார்கள் நமது ஊரில் ஒரு பஸ் தரிப்பு நிலையம் இருந்தால் நமது ஊரிலிருந்து தீகவாப்பியைக்கு சிங்களவர்கள் போக ஆரம்பிப்பார்கள் என்று ....... இது முற்றிலும் அறிவுக்கு பொருந்தாத ஒரு புதிராக இருக்கின்றது
காரணம் உண்மையிலேயே சிங்களவர்கள் நமது ஊரிநூடாக தீகவாப்பியைக்கு போக வேண்டுமென்று நினைத்தால் அவர்களுக்கு இன்றைக்கே நமதூரிநூடாகப் போக முடியும் அதற்கு நமதூரில் ஒரு பஸ் நிலையம் அவர்களுக்குத் தேவை இல்லை.


அம்பாறையிலிருந்து சம்மாந்துறையினூடாக நாளைக்கே அவர்களுக்கு அதை செய்ய முடியும். இதெல்லாம் இன்றைய நவீன காலத்துக்குப் பொருந்தாத ஒரு சிந்தனை
.
ஒரு சிறிய நாட்டில் இரண்டு சர்வதேச விமான நிலையங்களை உருவாக்கியிருக்கின்றோம் .......... இது ஒன்றும் பெரிதல்ல.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment