பேரீச்சம் பழம் பற்றிய சிறு குறிப்பும் அதன் சத்துக்கள் பற்றிய தகவல்களும்.

உலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 வகை பேரிச்ச மரங்கள், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன.

பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது.

அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தரம் குறைந்த பேரிச்சம் பழங்கள், விலங்குகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின், அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இதன், பாரம்பரிய வரலாற்றின் காரணமாக, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில்,பேரிச்சம்பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில், 1978ம் ஆண்டு, 23 லட்சமாக இருந்த பேரிச்ச மரங்களின் எண்ணிக்கை, 2003ம் ஆண்டு 4.07 கோடியாக அதிகரித்துள்ளது.

பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு:சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு விரைவில் சக்தியளிக்க கூடிய ஒரு உணவு பேரிச்சம்பழம்.

சாப்பிடுவதற்கு, 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னால், பேரிச்சம்பழங்கள் சிலவற்றை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து பசி உணர்வு குறையும். இது அதிகளவு உணவு சாப்பிடுவது மற்றும் அதனால் ஏற்படும் சோர்வில் இருந்து தடுக்கவும் உதவும்.

இந்த காரணத்தால் தான், நீரிழிவு நோயாளிகளுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும் போது, மூன்று பேரிச்சம்பழங்கள் வரை சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றனர்.

100 கிராம் பேரிச்சம்பழத்தில், 21 கிராம் நீர்ச்சத்து, 75 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் கொழுப்பு சத்து மற்றும் 2.5 கிராம் புரதச்சத்து அடங்கி உள்ளது.
மினரல்கள்:பேரிச்சம்பழத்தில் 15 வகை மினரல்கள் அடங்கி < உள்ளன. 100 கிராம் பேரிச்சம் பழத்தின் சதைப்பகுதியில், 648 மி.கி., பொட்டாசியம், 59 மி.கி., கால்சியம் மற்றும் 1.3 மி.கி., இரும்பு சத்து ஆகியவை உள்ளன.

அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு பேரிச் சம்பழம் மிகவும் நல்லது.

சிலவகை கடும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள, பேரிச்சம்பழங்கள் உதவுகின்றன.
கொழுப்பு சத்து:பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில் மிகவும் குறைவாக, 0.2 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரையே கொழுப்பு சத்து உள்ளது.
நார்ச்சத்து:பேரிச்சம்பழத்தில் பெக்டின் மற்றும் செல்லுலோஸ் என்ற நார்ச்சத்துகள் உள்ளன. 100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில், 6.5 கிராம் முதல் 11.5 கிராம் வரையிலான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

பிற பழங்களை விட அதிகமாக, பேரிச்சம்பழங்களில் தான், 3.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையிலான அளவு பெக்டின் நிறைந்துள்ளது.

பெக்டின், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
புரதச்சத்து:100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில், 2.5 கிராம் புரதச்சத்து உள்ளது.

ஏழு பேரிச்சம்பழங்கள் சாப்பிட்டால், அதனால், 1 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது.
கலோரி:ஒரு கிராம் பேரிச்சம்பழத்தில், மூன்று கிலோ கலோரிக்கு சற்று குறைவாக உள்ளது.

100 கிராம் பேரிச் சம்பழத்தில், 280 கிலோ கலோரி உள்ளது.

30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள், தினமும் 38 கிராம் பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment