அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி முஸ்லிம் பிரதேசங்களில் சுயேச்சையாக போட்டி.

(றியாஸ் இஸ்மாயில்)

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான முன்ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பான ஆராயும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனக் கூட்டம் அக்கரைப்பற்று ஆலம் நகர் காரியாலயத்தில் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவரும்,நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச சபைகளில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தெரிவு இக் கூட்டத்தில் ஓர் அங்கமாக இடம் பெறவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 0776962209 என்ற கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment