கலவரத்தை உருவாக்க ஓடித்திரியும் நீங்கள் அவர்களுக்கு சோறு கொடுப்பீர்களா?

திலீப் குமார் கணேசன்.

சந்தைக்கு சோனி வரக்கூடாது என்று இந்தப்பக்கம் இருந்து சொல்வீர்கள்,அந்தப்பக்கம் தமிழன் எங்கள்  ஊருக்கு தொழிலுக்கு வரக்கூடாது என்று சொல்வார்கள். ஒரு நாள் வன்முறையாக வெடிக்கும் தொடர்ந்து பத்து நாட்கள் கலவரம் நடக்கும் 12ம் நாள் பேச்சுவார்த்தை மறு நாள் பழையபடி நல்லுறவு ஒற்றுமை எல்லாம் ஏற்படுத்தப்படும்.

சுமுகமாக எல்லாம் வழமைக்கு திரும்பும். இடையில் நீங்கள் சண்டையிட்ட அந்த 10நாட்களில் மீன் விற்கவும், ஓலைப்பெட்டி,பாய் விற்கவும் வரும் ஏழை முஸ்லீமும் மேசன்,ஓடாவி என்று சோற்றுகாக கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழரும் செத்துப்போயிருப்பார்கள்.


விதவைப்பெண்களும் அனாதைக்குழந்தைகளும் உருவாக்கப்பட்டிருப்பார்கள்.
கலவரம் ஒன்றை உருவாக்க ஓடித்திரியும் நீங்கள் அவர்களுக்கு சோறு கொடுப்பீர்களா?


அரைவயிறும் கால்வயிறுமாய்  பட்டினியோடும் வறுமையோடும் போராடி பள்ளிக்கு சென்று படிக்கவும் வசதியில்லாமல் அடுத்தவர் கைகளை எதிர்பார்த்து அந்தக் குழந்தைகள் படாத பாடு படும்.

வருமானத்திற்கு வழியின்றி கணவனை இழந்து கிடைக்கின்ற தொழிலை செய்து வாழும் பெண் மீது பாலியல் சுரண்டலுக்காய் உங்களில் ஒரு கூட்டம் திரியும், பின்பொருநாள் அவள் வேசை என்று சொல்லிக்கொண்டு இலகுவாய் கடந்து செல்வீர்கள். 

உங்களை வைத்து அரசியல் செய்பவன் இனவாதத்தை காட்டி வென்றுவிட்டு தனது வேலையைப் பார்க்க போய் விடுவான். வன்முறையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் வருடக்கணக்கில் நீதிமன்றும் போலீசுமாக இழுபட்டு திரிவார்கள். இவற்றுக்காவே இத்தனை பிரயத்தனம் செய்கிறீர்கள். ஏன் என்றால் இழப்புக்கள் உங்கள் குடும்பத்திற்கு இல்லை தானே...


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment