சம்மாந்துறை பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகளை பார்வையிட கள விஜயம்.

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதிகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இனைத் தலைவருமான எம்.ஐ.மன்சூர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்கள் தலைமையில் இன்று வீதிகளை நேரில் சென்று களவிஜயம் மேற்கொண்டனர்.இதன்போது ஆஸ்வத்திரி 11ஆம் குறுக்கு வீதி, வெள்ளைக் காளியர் வீதி, 40 வீட்டுத்திட்ட பிரதேச வீதி உள்ளிட்ட பல வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் பிரதேசத்தில் வாழும் மக்களிடமும், பிரதேச சமூக அமைப்புகளிடமும் வீதியின் குறைபாடுகளையும் ஏனைய குறைபாடுகளையும் கேட்டரிந்துகொண்டனர்.இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தார் எம்.எம்.முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் வசீர், ஆகியோர்களும் கள விஜயத்தில் கலந்துகொண்டனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment