பெற்றோலை பதுக்கி வைக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை எச்சரிக்கும் அமைச்சர்.

தனியார் எரிபொருள் நிலையங்கள் சில, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், எரிபொருளை மறைத்து வைத்துக் கொண்டு விநியோகிக்காமல் இருக்கின்றன. அத்தகைய நிலையங்கள் தொடர்பில், எதிர்வரும் 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவற்றை அரசுடமையாக்கவும் தீர்மானித்துள்ளோம் என்று, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போது, போதியளவு எரிபொருள் காணப்படுகின்றது. அதில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால், கட்டாயம் அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார். ​பெற்றோலிய வளத்துறை அமைச்சில், நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இதைத் தெரிவித்தார்.

“எந்தவிதத் தட்டுபாடுமின்றி எரிபொருளை எம்மால், எதிர்வரும் 3 வாரங்களுக்கு விநியோகிக்க முடியும். அத்துடன், இன்னும் இரண்டு வாரங்களில், எரிபொருள் தாங்கிய மூன்று கப்பல்கள், நாட்டுக்குள் வருகின்றன. இதனால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக, தற்போது அதிகளவான எரிபொருளை பெற்று வருகின்றனர்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு, 2,500 மெற்றிக்தொன் எரிபொருள் விநியோகிக்கப்படும். ஆனால், நேற்று, 3,500 மெற்றிக்தொன் எரிபொருளும் இன்று, 4,000 மெற்றிக்தொன் எரிபொருளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் தொடர்பிலான தவறான தகவல்களை, குறுந்தகவல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் யார் என்பதைக் கண்டறிவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் தெரிவித்துள்ளேன். ​அவரும் ஆராய்ந்து பார்ப்பதாக எங்களுக்கு உறுதி அளித்துள்ளார் என்றார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment