சாய்ந்தமருது மக்களின் கொள்கைப் பிரகடனம்.

A.B.M. அசீம்

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை பிரகடனம் செய்யக்கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கடையடைப்பு நடவடிக்கைகள் அரசியல்வாதிகளின் எந்தவித பதிலுமின்றி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இருந்தாலும் ,சாய்ந்தமருது ஊர் சார்பில் ஜும்மா பெரிய பள்ளிவாயல் மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றினைந்து சாய்ந்தமருதுக்கான அரசியல் பயணத்தின் புதிய பாதை தொடர்பான கீழ்க்குறிப்பிடப்படும்  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைப் பிரகடனத்தை  வெளியிடப்பட்டன.

1. சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை பெற்றுத்தரும்வரை எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்.

2. சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை பெற்றுத்தரும்வரை அதனது எல்லைக்குள் எந்தவித அரசியல் கட்சிகளினதும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்குவதில்லை.

5. ஊருக்குள் கட்சிகளுடன் தொடர்ந்து  தொடர்பிலிருக்கும் நபர்களை ஊர் பிரகடனத்துக்கு எதிராக செயல்படும் துரோகிகள் என அடையாளப்படுத்தல்.

3. சாய்ந்தமருது பிரதேச சபை பெற்றுத்தரும்வரை பிரதேசத்துக்குள் இடம்பெறும் பொதுநிகழ்வுகளில் எந்த அரசியல்வாதிகளையும் அனுமதிப்பதில்லை.

4. எந்தவொரு அரசியல் கட்சிகளினதும் செயலகங்கள் இயங்கச் செய்வதில்லை.

6. முக்கியமாக, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது எந்தக்கட்சியும் சாராத நேர்மைமிக்க நபர்களை சுயேச்சையாக களமிறக்குதல். 

ஆகவே இனிவரும் காலங்கள் சாய்ந்தமருதின் புதிய அரசியல் பயணத்தின் பாதையை புதிய தலைமைத்துவம் ஏற்கும் நிலை தோன்றியுள்ளது.இது ஏனைய அரசியல் கட்சிகளுக்கு பாரிய பின்னடைவாகும்.

7. கல்முனை மாநகர சபையை 4 ஆக பிரிக்கக்கோரும் தீர்மானம் வெறும் கண்துடைப்பு. அது சாத்தியமான கூற்று அல்ல. சாய்ந்தமருதுக்கு உடனடியாக பிரதேச சபையை வழங்கவேண்டும் .

போன்ற தீர்மானங்கள் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment