இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அவசியத்தேவை அரசியல்வாதிகளை வழிநடத்தக் கூடிய சிவில் சமூக கட்டமைப்பே!

சபூர் ஆதம்.

இலங்கையைப் பொருத்த மட்டில் தேசிய ரீதியாக மையப்படுத்தப்பட்ட அதிகாரமொன்று முஸ்லிம்களுக்கு ஏற்படுவதென்பது சாத்தியமால்லாத போதும், முஸ்லிம் கிராமம், ஊர் சார்ந்த - பள்ளியை மத்திய தளமாகக் கொண்ட அதிகாரம் பற்றிய ஒரு பொறிமுறையை உருவாக்கிருக்க முடியும்.

அத்துடன் பள்ளியானது, முழுநேரமாக இயங்குகின்ற பல நிறுவன ஒழுங்குகள் கொண்ட, முழுநேர ஊழியர்கள் பலரைக் கொண்ட ஒரு சமூக நிறுவனமாக பொருளாதார பலமும், அறிவுப் பலமும் உள்ளடங்கிய பலமான கட்டமைப்பு கொண்ட சமூக ஒழுங்கில் அரசியல் அதிகாரம் கையில் இல்லாதபோதும் சமூகத்துக்கு அவ்வப்போது தேவையான விடயங்களை சாதித்துக் கொள்ளக் கூடியதாகவும், அந்தந்த பகுதி மக்களின் பாதுகாவலர்களாகவும், குறித்த பகுதியின் சமூக நலன்களைக் கவனிக்கும் இயக்கமாகவும் செயல்படக் கூடியதாகவும், அரசியல்வாதிகளின் ஆலோசகர்களாகவும் , வழிகாட்டிகளாகவும் இருக்கக் கூடிய ஒரு ஒழுங்கான நிறுவனமயப்படுத்த வேண்டும்.

எமது பாடசாலைகளை எவ்வாறு சிறந்த கல்வி நிலையங்களாக அமைத்துக் கொள்வது? தொழில்நுட்பம், விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளையும் எமது பிரதேசங்களில் எவ்வாறு வளர்த்துக் கொள்வது? ஒவ்வொரு கிராமமும் எந்தத் துறைக்கு மிகவும் பொருத்தமாக அமைய முடியும்? என்ற ஆய்வுகள் மேற்கொண்டு அவைகளை அழகான முறையில் திட்டங்களை வகுத்து நடைமுறை படித்த முடியும்.

இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை செய்ய “ஆகக்குறைந்தளவு அடிப்படைத் தேவைகள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நிறைவேற்றப்பட்டால்தான் தனிமனிதர்கள் சொத்துருமை கொண்டவர்களாக இருக்க முடியும்” “போதுமானளவு வசதிகள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கிடைக்கும்போதுதான் சமூகத்தில் பணக்காராகள் இருக்க அனுமதிக்கப்படுவர்” என்ற இஸ்லாத்தின் இரு பொருளாதார விதிகளும் அவற்றிக்குரிய ஆதாரங்களுடன் விளக்கப்பட்டு, நடைமுறையில் ஓரளவாவது சாத்தியப்படுத்தப்படுத்த முடியும்.

இஸ்லாமிய சமூகம் பாரம்பரியமாகக் கொண்டிருக்கும் அல்-குர்ஆன் சுன்னாவின் நேரடி வழிகாட்டலால் உருவான நிதி நிறுவனங்களான ஸகாத்தும், வக்பும் அவற்றிற்குரிய உண்மையான வடிவில் நடைமுறைக்கு கொண்டு வர முடியும்.

நவீன உலகின் பொருளாதார நிலமைகளால் உருவான வங்கி, காப்புறுதி போன்ற நிறுவனங்களுக்குப் பகரமாக வட்டியில்லா வங்கியமைப்பு, கூட்டுறவுக் காப்புறுதி என்பன நிறுவப்பட வேண்டும். அதனை ஊரின் பிந்தங்கிய பகுதிகளுக்கு சென்றடையச் செய்வதில் போதிய ஆர்வம் காட்ட முடியும்.


உண்மையில் ஒரு இஸ்லாமிய அரசு செய்ய வேண்டிய சில வேலைகளை, தாமாக முயன்று ஓரளவாவது செய்ய முடியும். இவைகள் அனைத்தும் நல்லதொரு சிவில் சமூக கட்டமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த முடியும் என்பதை விளங்கி அதனை உருவாக்கி நெறிப்படுத்தி அதன் செயற்பாடுகளை ஒரு நேரான பாதையில் செலுத்துவது எமது எல்லோருடைய கடமையுமே!!
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment