சுனாமி வதந்தியால் பல இடங்களில் பாடசாலை மூடப்பட்டுள்ளது, மக்களும் சிதறி ஓட்டம்.

காரைதீவு - சகா.

அம்பாறை கரையோரத்தில் சுனாமி வதந்தி நிலவுகிறது!  இதனால் அம்பாறை கரையோரத்தில் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன'.மக்;கள் சிதறிஓடுகின்றனர். படையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம்!

இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பூகம்பம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் இல்லை.

அமெரிக்காவின் குவாம் தீவில் 5.2 றிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சேதங்கள் பற்றிய அறிவிப்பும் இல்லை ஓந்தாச்சிமடம் பாண்டிருப்பு மற்றும் கல்முனையின் சில இடங்களில் கிணற்று நீர் வற்றியுள்ளதோடு பனிமூட்டம்காணப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. பொது மக்கள் அவதானமாக இருங்கள்நீலாவணை தொடக்கம் கல்முனைசாய்ந்தமருது காரைதீவு நிநதவூர் அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் வரை இப்பதட்டமும் பீதியும் நிலவின.

கடல் உள்வாங்கியயதாகவும் கரையோரத்திலுள்ள பல கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக சடுதியாக குறைந்தமையும் இப்பதட்டத்திற்குக் காரணம்.


எனினும் சுனாமி அனர்த்த எச்சரிக்கை கோபுரம் அலறவில்லை. பொலிசார் மற்றும் அனர்த்தமுகாமைத்துவப்பிரிவினர் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

எங்கு பார்த்தாலும் மக்கள் பயபீதியுடன் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பிரதானவீதியை நோக்கி ஓடிவந்தனர். பாடசாலைகள் இழுத்துமூடப்பட்டன. பிள்ளைகளை அழைத்துச்செல்ல பெற்றோர்கள் முண்டியடித்தனர்.


அலுவலகங்களில் இருந்த அலுவலர்கள் தொடக்கம் அனைவரும் பீதியில் வெளியேறினர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment