பாத்திமா சிமாறா அலி எழுதிய கரையை தழுவும் அலைகள் கவிதை நுால் வெளியீட்டு விழா.

பாத்திமா சிமாறா அலி எழுதிய கரையை தழுவும் அலைகள் கவிதை நுால் வெளியீட்டு விழா 19/11/2017 அன்று மாலை 4.30  மணிக்கு கொழும்பு அல் ஹிதாயா மா/வி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களும், கௌரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம் பைரூஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந் நிகழ்வில் கவிதை நூல் நோக்கு தொடர்பாக கவிஞர் மேமன் கவி மற்றும் திருமதி. புர்கான் பீ இப்ஃதிகார்  ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக திரு.பெளசுல் ஹமீட் அவர்கள் (ஹமீடியாஸ் உரிமையாளர்) மற்றும் திரு.என்.எம்.அமீன் அவர்கள் ( தலைவர் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம்,பிரதம ஆசிரியர் நவமணி) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார்  ஏ.எம்..அஸ்கர் அவர்கள் (வசந்தம் வானொலி)

நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமானவர்களும் அன்புடன் கலந்து கொள்ளுமாறு திறந்த அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி
சிமாரா அலி


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment