சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பாக நாம் மா குழைத்திருப்பது மாகாண சபையில் மட்டுமே.

நான் பொதுவாக அரசியல் கருத்துகள் பேசுவது இல்லை. இந்த விடயத்துக்கு பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பதால் இந்த பதிவை இடுகிறேன்.
யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.


மாண்புமிகு Anver Ismail குறுகிய காலத்துக்குள் சம்மாந்துரைக்கு செய்த சேவைகள் அளப்பரியது. அரசியல்வாதிகள் செய்த சேவைக்கு அவர்களை மக்கள் என்றென்றும் ஞாபகம் வைத்திருப்பர். வைத்தியசாலைக்குப் பேர் வைத்துதான் அவர்களை ஞாபகப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. .

எமது வைத்தியசாலை 94 வருடம் பழமை வாய்ந்தது. நீங்கள் வாதிடலாம் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையை. அதனுடைய நிலமை வேறு அதை உருவாக்கியவர் அவரே. ஏற்கனவே கல்முனை ஆதார வைத்தியசாலை என்று ஒன்று இருப்பதால் வேறு பெயர் வேண்டிய நிலைமையும் கூட.


இலங்கையில் வெறும் நான்கு வைத்தியசாலை சாலைகளே தனிப்பட்டோரின் பெயரில் உள்ளது.

*Hospitals with individuals’ names:-*
*De Soysa Hospital for Women*
*Lady Ridgeway Hospital for Children*
*Sirimavo Bandaranayake Hospital*
*Kalmunai South (Asrof Memorial) Hospital*


அந்த 4 hospital களும்தான் Health ministry இல் தனி நபர் பெயர்களில் வரும் hospital கள். அவற்றுக்கான ஒற்றுமை அவை இருக்கும் ஊர்களில் ஊரை குறிப்பிடும் இன்னுமொரு அதே தரத்தை உடைய Hospital உண்டு. அதை பயன்படுத்தி தான் வேறு பெயரை புகுத்தி உள்ளார்கள்.

(இருக்க Wijaya kumarathunga Memorial Hospital, Sir Anton Jayasooriya Memorial Hospital எல்லாம் Health ministry க்கு கீழ் வருபவை அல்ல. 
அவை அரசினால் special act மூலம் உருவாக்க பட்டவை. அவை board மூலம் manage பண்ண படுபவை. அவற்றின் profile பார்த்தால் புரியும். 
உதாரணமாக Wijaya Kumarathunga Hospital ஆனது "The Wijaya Kumarathunga Memorial Foundation Act No 31 of 1998" உருவாக்க பட்டது.
இதே போல் தான் John Kotelawala Defence University Hospital, Army Hospital Narahenpita, Police hospital Narahenpita என்பனவும் Defence Ministry க்கு கீழ் வருபவை, health ministry க்கு கீழ் வராது.)


"மக்களால் உருவாக்கப்பட்டு Register ஆன Anver Ismail memorial BASE HOSPITAL" என்ற ஒரு கருத்து. Register ஆனது எங்கு என்று சொல்ல முடியுமா? நாங்கள் மா குழைத்து இருப்பதெல்லாம் மாகாண சபைக்குள் மட்டும் தான்.

*சுகாதார அமைச்சில் பதிவு செய்தால் எந்த அப்பனாலும் அந்த பெயரை மாற்ற ஏலாது.

*மாகாண சபையில் ஒரு தீர்மானமாக (08/He/52/2009) நிறைவேற்றி விட்டு ஏமாற்றிவிட்டார்கள்.

Line Ministry ல பதிவான hospital களின் பெயர் லிஸ்ட் இந்த Link ல இருக்கு. இது 2017 ல update ஆன list

இதுல "Anver Ismail memorial BASE HOSPITAL" எங்க இருக்கு என்று சொல்லுங்க.
போக "சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்ட பெயர்" ஆக இருந்தால் சுகாதார அமைச்சு அனுப்புற Appointment letter , Transfer letter ல ஒரு முறையாவது அந்த பெயர் வந்து இருக்கு என்று காட்ட முடியுமா? ( நான் மாகாண அமைச்சை சொல்லவில்லை மத்திய சுகாதார அமைச்சு.) "Anver I smail Memorial BASE HOSPITAL" என்று Central Health Ministry அங்கீகரிச்ச ஒரு letter or Circular உங்களால் காட்ட முடியுமா?


கொண்டுவந்தால் நானே முன் நின்று செய்து தருகிறேன். 
நான் Ministry of Health , Information & Planning unit இல் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். கேட்பதையெல்லாம் நம்பி கொண்டு இன்னும் ஏமாற வேண்டாம்.*letter or Circular கூட வேண்டாம் அதன் Date & Number இருந்தாலே போதும்.*


சுகாதார துறையை பொறுத்த வரை மாகாண அமைச்சு ஒரு dummy piece தான். அதட்கு மாகாண அமைச்சுக்கு கீழ் வரும் வைத்திய சாலைகளுக்கான (மத்திய அரசு வழங்கும்) நிதி ஒதுக்கீடு, தாதிய உத்தியோகத்தர் , Minor staff பங்கீடு போன்ற சில விடயங்களுக்கே அதிகாரம் வழங்க பட்டுள்ளது.

ஒரு வைத்திய சாலை மாகாண சபைக்கு கீழ் வந்தாலும் வைத்தியர்கள் appointment, மருந்து விநியோகம், வைத்திய சாலையை தரம் உயர்த்துதல் , பெயர் மாற்றுதல் என்பன மத்திய அரசின் கீழே உள்ளவை. மாகாண சபை recommendation மட்டுமே வழங்கலாம்.


சுருங்க சொன்னால் மாகாண சபைக்கு கீழ் வரும் school பெயர் மாற்றுவது போல் வைத்திய சாலை பெயர் மாற்ற முடியாது. Hospital system ஒரு network. அதில் மாற்றம் செய்வதனால் மத்திய அரசே தீர்மானிக்கும்.

Name board remove பண்ணியதக்கு கொந்தளிக்கும் சகோதரர்கள் முதலில்
மாகாண சபையில் Anver Ismail Memorial Hospital என பெயர் மாற்றம் செய்தவர்கள் மத்திய அரசில் ஏன் பதிவு செய்யவில்லை என்று கேளுங்கள்.*
_(மத்திய அரசு என்ன பதில் அளித்தது என்று அவர்களிடம் கேட்டால் தெரியும்)_


மாகாண சபையில் நிறைவேற்றி விட்டு அதிரடியாக பெயர் பலகை போட்டார்கள்.

*மத்திய அரசில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிர்வாக முறை தெரியாதா? இல்லை மத்திய அரசு reject பண்ணியதை மறைத்து விட்டார்களா?*


பெயர் பலகை திடீரென நீக்கப் பட்டதட்கு பல அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் எனக்கு தெரிந்த ஒரு காரணம் தகவல் அறியும் சட்டமூலம் (RTI Act No 12 of 2016) கீழ் Line Ministry க்கு வந்த கடிதம் "சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ பெயர் என்ன?" என்று வினவப்பட்டு banner photo வுடன் வந்த கடிதம்.

*இதட்கு மேலும் "Anver Ismail Memorial Hospital" என்ற பெயரையே தான் வைக்க வேண்டும் என்றால் கோரிக்கையை மத்திய அரசிடம் கொண்டு செல்லுங்கள்.* Marhoom anver ismail forum

கடைசியாக ஒரு குர்ஆன் வசனத்தை சொல்லி முடிக்கிறேன்.

*முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்;* *(இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்;* *பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.*
*(அல் குர்ஆன் 49:6.)*


Dr Ziyad Aia
MBBS (Peradeniya)
MSc - Health Informatics
Information Unit
Ministry of Health
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment