உள்ளுராட்சி தேர்தலும் சம்மாந்துறையும்.

மாஹிர் முகைடீன்.

காலம் காலமாக அரசியல் வாதிகளின்  சுய நலத்தினாலும், பொடுபோக்குத் தன்மையினாலும்  புறக்கணிக்கப்பட்டு இன்றும் பிரதேச சபையாக இருக்கின்ற சம்மாந்துறைப் பிரதேச சபை இன்று முஸ்லீம் காங்கிரசின் கையில் இருந்து மக்கள் காங்கிரசின் கைக்கு மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதற்கு  காரணம் என்ன ???

 ஏறாவூர், கிண்ணியா, காத்தான்குடி ,அக்கரைப்பற்று, அம்பாறை இந்த ஊர்கள் மாநகர சபையாகவும், நகர சபையாகவும் இருக்கும் இடத்தில் இவை அனைத்தையும்  விட சனத்தொகையிலும், பரப்பளவிலும் கூடிய சம்மாந்துறை ஏன் இன்னும் பின்தங்கிய பிரதேச சபையாக இருக்கின்றது  ??? இதைப்பற்றி எப்போதாவது எமது அரசியல் வாதிகள் சிந்தித்து இருப்பார்களா ???

அக்கரைப்பற்று மாதிரி சம்மாந்துறையையும் ஒரு மாநகர சபையாகவும், பிரதேச சபையாகவும் பிரித்திருந்தால் இன்றைக்கு முஸ்லீம் காங்கிரஸ் ஒரு சபையையாவது தன் வசம் வெற்றிகொள்ள வாய்ப்புக்கள் அதிகம் ஆனால் அவர்கள் அப்படி செய்யாததனால் இன்று அவர்கள் ஓரம் கட்டப் பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இதட்கு யார் காரணம் ??? எல்லாவற்றையும்  ஆறுதலாக செய்ய நினைப்பவர்களுக்கு இதுதான் கதி !!!

றிசாத் பதியுத்தின் சம்மாந்துறையில் ஒரு கைத்தொழில் பேட்டை ஒன்றை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகத்தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன அப்படி ஒன்று வருவது சம்மாந்துறையின் சரித்திரத்தை மாற்றக்கூடிய ஒன்றாகும். இப்படி மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையின் தேவை அறிந்து சேவை செய்தால் அவர்கள் சம்மாந்துறையில் ஆட்சியைப் பிடிப்பது நிச்சயம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment