கிழிந்த சப்பாத்து புத்தகப் பையோடு பாடசாலை செல்லும் மாணவர்களை நீங்கள் கண்டதில்லையா..???


நண்பர்களே..!! நமது வீட்டுப் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது விதவிதமான புத்தகப்பைகளுடன் செல்கிறார்கள், விதவிதமான அப்பியாயச் கொப்பிகளோடு செல்கிறார்கள், விதவிதமான சப்பாத்துக்கள் அணிந்து செல்கிறார்கள் ஆனால் நமது பிரதேசத்தில் உள்ள எத்தனையோ ஏழை மாணவ-மாணவிகள் இன்னும் கிழிந்த சப்பாத்தோடும், கிழிந்த புத்தகப் பையோடும் சென்று கொண்டிருப்பதை நாம் இன்னும் அறியவில்லையா...??? இதனைப் பார்த்து நமது மனம் இன்னும் குமுறவில்லையா...???

இத்தகைய ஏழைச் சிறார்களின் தேவையறிந்து அவர்களுக்கு முடியுமானளவு உதவி செய்ய சம்மாந்துறையைில் உள்ள Sammanthurai Welfare & Development Council அமைப்பினர் சம்மாந்துறையில் உள்ள இவ்வாறான 300 மாணவர்களை இனங் கண்டு அவர்களுக்கு உதவ “ புன்னகையுடன் பாடசாலைக்கு” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப்பை-சப்பாத்து-கொப்பிகள் என வழங்க நிதி திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை தகுந்த சந்தர்ப்பமாக பயண்படுத்தி அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த நிதியுதவியினை Sammanthurai Welfare & Development Council யின் கணக்கு இலக்கத்துக்கு தாராளமாக வழங்குங்கள்.

மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment