என்மீது சேறுபூசும் செயற்பாட்டை தான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு தனிமனிதனது விருப்பு வெறுப்புக்களுக்காக வலயக்கல்விப்பணிப்பாளர் ஒருவரது  சுய கௌவரவம் பாதிக்கும் வகையில் அப்பட்டமான பொய்களை தெரிவித்து என்மீது சேறுபூசும் செயற்பாட்டை தான் வண்மையாக கண்டிப்பதுடன் வெறும் பொய்யான தகவல்களை வெளியிட்டமை வேதனையான செயலாகும் என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் தெரிவித்தார்.!!

பாலியல் குற்றங்களைப் புரியும் அதிபர், ஆசிரியர்களை காப்பாற்றும் முயற்சிகளில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  ஈடுபட்டு வருவதாக அண்மையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை இணையத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பாக விளக்கமளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண நல்லாட்சிக்கும் கல்விக்குமான அபிவிருத்தி மன்றத்தின் சம்மாந்துறைக்கிளைத்தவிசாளர் கரீம் எனும் நபரால் வெளியிடப்பட்ட தகவல் அப்பட்டமான பொய் என்பதுடன் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்காக என்மீது சேறு பூசுவது பொருத்தமில்லை!

சம்மாந்துறை வளத்தாப்பிட்டியிலுள்ள ஒரு முஸ்லிம் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய ஒருவர் அங்கு கடமையாற்றிய விஞ்ஞான ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும் அவரை நான் காப்பாற்றி வெளிநாடு செல்வதற்கு உதவியதாக சொல்லப்பட்டவிடயம் முற்றிலும் பொய்யானதாகும்; அதிபர் ஒருவர் பாடசாலைக்கு வெளியில் செய்யும் செயற்பாடுகளை வலயக்கல்வி அலுவலகம் மேற்பார்வை செய்யமுடியாது பாடசாலையில் நடைபெறும் சம்பவங்களை மாத்திரந்தான் எமது வலயக்கல்வி அலவலகத்தால் கவனிக்கமுடியும்.

வளத்தாப்பிட்டியிலுள்ள  அப்பாடசாலையின்  அதிபரினுடைய பிழையான நடவடிக்கைகள் தொடர்பாக எமது அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு அழைத்தபோது அவ் அதிபர் எவ்வித அறிவித்தலும் இன்றி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக அறிந்தோம் .
அதனால் அவ் அதிபரை வேலையில் இருந்து உடனடியாக நிறுத்தி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் தெரிவித்து இருக்கின்றோமே தவிர அவர் வெளிநாடு செல்வதற்கு விடுமுறைபெற்றுக்கொடுத்து அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி காப்பாற்றியதாக கூறியிருப்பது வெறும் பொய் என்பதுடன் என்மீதும் வலயக்கல்வி அலுவலகத்தின் நற்பேருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.

அதே போன்று சம்மாந்துறை அல்-மனார் வித்தியலாய அதிபராகக் கடமையாற்றிய ஒருவர் 05ஆம் வகுப்பு மாணவிகளுக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டபோது  அவரை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அப்பாடசாலையில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்து அப்பாடசாலைக்குப் புதிதாக பெண் அதிபர் ஒருவரை நியமனம் செய்ததுடன் மேலதிகவிசாரணைக்காக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் எழுத்துமூலம் அறிவித்தும் இருக்கின்றோமே தவிர அவரைக் காப்பாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் செய்யப்படவில்லை குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்  அவ்வாறானவர்களைக் காப்பாற்றவேண்டிய தேவை இல்லை.

இதேபோன்று நாவிதன்வெளிக் கோட்டத்திலுள்ள அகத்தியர் வித்தியாலயத்தில் 02 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்து நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொய்யான தகவலை வெளியிட்டுள்ளமை அச் சமூகத்தை இழிவுபடுத்துவதற்கான செயலாகும் அகத்தியர் வித்தியாலயத்தில் அவ்வாறான எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.  ஒரு ஆசிரியர் பாடசாலைக்குப் பிந்திவருவதனாலும் அவரது சேவையில் திருப்தி இல்லாமையினாலும் இடமாற்றம் செய்யப்பட்டது.

அதுதவிர நாவிதன்வெளிப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே ஒரு சில பாடசாலைகளின் அதிபர்களை இடமாற்றம் செய்தோமே தவிர எந்தவிதமான துஷ்பிரயோகமும் நடைபெறவில்லை.

இந்நிலையில் பொய்களைக்கூறி எனது தொழிலுக்கும் வலயக்கல்வி அலுவலகத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு தனிப்பட்ட நபர்கள் செயற்படுவது பொருத்தமில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment