சம்மாந்துறை அம்பாரை 1ஆம் வீதி கொங்கீறீட் வீதியாக செப்பனிடும் வேலைத்திட்டம்.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 55 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அம்பாரை 1ஆம் வீதி கொங்கீறீட் வீதியாக செப்பனிடும் வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கிதிர் முஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.முஸ்தபா, சம்மாந்துறை மக்கள் மன்ற தலைவர் கே.எல்.யூசுப், மலங்கு மஸ்தார் முதியோர் சங்க தலைவர் எம்.ஐ.இப்றாகீம், மகளிர் சங்க பிரதிநிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சமூக தொன்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நீண்ட காலமாக இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டதனை பிரதேச பொது மக்கள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்த அவர் மேற்கொண்ட அயராத முயற்சியின் பயனாக இவ்வீதி உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment