சபீக் ரஜாப்தீன் அவர்களே! நீங்கள் சொல்லுவது போன்று கிழக்கான் சொரணை கெட்டவன்தான்.

சபீக் ரஜாப்தீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆம், நீங்கள் சொல்லுவது போன்று கிழக்கான் சொரணை கெட்டவன்தான். ஏனென்றால்,

வெள்ளத்தினால் மேல்வர்க்கம் என கூறும் நீங்களெல்லாம் தண்ணீரில் மூழ்கி தடுமாறி நின்றபோது, இனம் மதம் பாராது தனது சொந்தங்கள் என்று திணறி அடித்து ஓடி வந்து நிவாரணம் என்றும் களப்பணி என்றும் செய்தானே அதற்காக கிழக்கான் சொரணை கெட்டவன்தான்.

மண்சரிவு ஏற்பட்டபோது மேல்வர்க்கம் என கூறும் நீங்களெல்லாம் உன்ன உணவின்றி இருக்க இடமின்றி அனாதரவாக இருந்த போது, உங்களுக்காக வீடு வீடாக சென்று பணம் சேர்த்து உங்களுக்கு உதவி செய்தானே, அதற்காக கிழக்கான் சொரணை கெட்டவன்தான்.

இரத்தம் சிந்தி உயிர் பழிகொடுத்து நோன்புபிடித்து கிழக்கானின் கண்ணீரில் வளர்ந்த கட்சியையும் தலைமையும் உங்களுக்கு தாரை வார்த்து கொடுத்தானே, அதற்காக கிழக்கான் சொரணை கெட்டவன்தான்.

அமைப்பாளரே!

நீங்கள் அலங்கரிக்கும் பதவியும், அதனால் அடைந்து கொண்டு இருக்கும் சுகபோக வாழ்க்கையும் கிழக்கான் உங்களுக்கு போடட பிச்சை என்பதை மறவாதீர்கள்.


இலங்கை முஸ்லிம் மக்களின் அபிமான குரலாக "இருந்த" ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்து கொண்டு பொறுப்புணர்வில்லாமல் சமூகவலைத்தள கலந்துரையாடலில் "கிழக்கு மக்களை ஏளனம் செய்து கருத்து வெளியிட்டது" வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதற்காக நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேற்கவேண்டும்.

வடக்கு கிழக்குக்கு வெளியே ஆங்காங்கே பரந்து வாழும் எமது உறவுகளுக்காகவும் அவர்களின் இருப்பிற்காகவும் கிழக்கும் முஸ்லிங்கள் செய்து கொண்டு இருக்கும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் உங்களை போன்ற மதி கெட்டவர்களால் ஒரு போதும் உணரவும் முடியாது விளங்கவும் முடியாது.

இன்று கிழக்கு முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் "மாற்றத்திற்கு" உங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் மேலும் "உந்தூக்கத்தை" ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக உங்களுக்கு கிழக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவிப்பதும் எனது கடமை என்று நினைக்கிறேன்.

உங்களை போன்ற மாமூல் அரசியல் செய்யும் பொக்கணம் கெட்டவர்கல் பொறுப்பில் இருந்ததனால்தான் கடந்த காலங்களில் ஒட்டுமொத்த முஸ்லிங்களின் எதிர்பார்ப்புகளும் தவிப்புகளும் கனவாகவே கடந்து சென்றது. அதுமட்டுமில்லாமல் உங்களை போன்ற அரசியல் வியாபாரிகளின் அநாகரீகமான செயற்பாடுகளினால் இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய மத சகோதரிகளிடம் கூனி குறுகி நிற்கிறது.

உங்களை போன்ற வக்கிர சிந்தனை கொண்ட வறுமை பிடித்த மேதாவிகளின் கடந்த கால செயற்பாடுகளே, இன்று கிழக்கில் உருவாகி இருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் விழிப்புணர்விற்கும் காரணமாகி இருக்கிறது. அதற்காக சந்தோசப்படுகிறோம்.

கிழக்கில் மக்களின் இரத்தமும் வியர்வையும் பிசைந்து உரமிட்டு வளர்த்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்பாளராக இருந்து கொண்டு கிழக்கு முஸ்லிங்களை கேவலப்படுத்த உங்களுக்கு அதிகாரம் தந்தவர் யார்? உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது கிழக்கு முஸ்லிங்களை பற்றி கதைக்க?

இந்த கட்சிக்காக தங்களின் நேரத்தையும் அறிவையும் குடும்பத்தையும் பொருளாதாரத்தையும் தியாகம் செய்த கிழக்கு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைப்பாளர் பதிவி பறிக்கப்பட வேண்டும்.

இது திட்டமிட்டு பேசவில்லை என்றாலும், கிழக்கு மக்கள் பற்றி அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும் சிந்தனைதான் இதுவன்றி வேறொன்றுமில்லை. எமது சமூகத்தின் விரோதிகள் இவர்களைப்போன்ற துவேசத்தை கக்கும் பொறுப்பாளர்களாகும்.

சிங்கள தமிழ் பேரினவாத சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முன், உங்களை போன்ற உள்வீட்டு பிரிவினைவாதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உருவாகி இருக்கிறது.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் அமைப்பாளர் அவர்களே! இலங்கை முஸ்லிங்களின் அடையாளம் கிழக்கு மக்கள் தான்.

இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தையும் சிந்தித்து அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் பல்வேறு பரிணாமங்களில் சிந்தித்து தீர்மானங்களை எடுத்து கொண்டு தேசத்திற்காக வாழும் மக்கள் தான் கிழக்கு மக்கள்.

உங்களின் பேச்சுக்கள் வலுவிழந்து போய்விட்டது. நீங்கள் பயந்து நாடகம் ஆட நினைக்கிறீர்கள். உங்களுக்காக கிழக்குக்கு வெளியே வாழும் எங்களின் உறவுகளை இழக்க நாங்கள் தயாரில்லை. நாங்கள் மீண்டும் உங்களை அரவணைத்தே எங்களின் பணியை தொடர்வோம். ஏனென்றால், நாங்கள் முன்மாதிரியானவர்கள்.

மனாப் அஹமத் றிசாத் 
அக்கரைப்பற்று.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment