கூழ் முட்டைகளை உடைத்து கொத்து ரொட்டி - நோயினால் காவுவாங்கப்படும் நம் சமூகம்..!!

மொஹமட் காமில்

தரங்கெட்ட உணவு வகைகளை கையாள்வதன் மூலம் நோயினால் காவு வாங்கப்படும் நம் சமூகம்..!!

இதனை நாம் என்றாவது சிந்தித்து பார்த்ததுண்டா..?

கோழிப் பண்ணையில் இருந்து இன்னும் விரிவாக சொல்லப் போனால் கோழியின் மலவாயில் இருந்து வெளியான முட்டை அதே கணத்தில் எவ்விதத்திலும் சுத்தப் படுத்தப் படாமல் பெட்டிகளில் போடப்பட்டு நேரடியாக சந்தைக்கும் ஏன் கடைகளுக்கும் உணவகங்களுக்கு கூட வந்து சேருகின்றன.

குறிப்பாக உணவகங்களில் கொத்து ரொட்டி மற்றும் முட்டை ரொட்டி ஆப்பை போடும் சமயல் விற்பன்னர்கள் எவ்விதமான சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் அங்கு காணப்படும் ரொட்டிக்கால்லில் அல்லது ஆப்பை சட்டியில் மிகவும் அழகாக இல்லை நமக்கு அருவருப்பு வரத்தக்கதாக உடைத்து சில நேரங்களில் உடைக்கும் முட்டைகள் கூழ் முட்டைகளாக இருந்த சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.அதை அப்படியே கொத்து ரொட்டி களிலும் ஆப்பை மற்றும் அப்பங்களிலும் இலாவகமாக பயன்படுத்து கின்றனர் நாமும் வேதனையின் உச்சத்தில் இதனை அவதானித்து வருகின்றோம்.

இதை அவர்களிடம் கேட்டால் வீனான வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மனவருத்தம் மாத்திரமே எஞ்சும். இவ்வாறான சுகாதாரம் கெட்ட உணவுகளை நாம் உண்ணுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்.? 

இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டியது யார்..? 

முட்டைகளை சரியான மற்றும் சுகாதாரமான முறையில் உணவகங்களில் பயன்படுத்த ஏதாவது நடைமுறைகள் எமது ஊர்களில் உள்ள உணவகங்களில் உண்டா.? 

இவ்வாறு பயன்படுத்தும் நபர்களுக்கு என்ன தண்டனை வழங்க முடியும்.? 

சுத்தமில்லாத உணவுகளை தயாரிக்கும் உணவகங்களுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப் படுகின்றன..?

கொத்து ரொட்டி களிள் போடப்படும் முட்டைகளுக்கு மாத்திரமல்ல பிரச்சினை.. கொத்தில் இடப்படும் மரக்கறி வகைகள் சுகாதாரமான முறையில் பேனப்படுகின்றதா..? மரக்கறி வகைகளின் உச்சபட்ச ஆயுட் காலம் எவ்வளவு (Self Life).? மாலை 5 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை கொத்து மேசையில்தான் அந்த தரம் கெட்ட மரக்கறி வகைகள் அப்படியே இருக்கு இதை எவ்வாறு அவதானிக்கலாம். இதை தடுப்பதற்கு ஏதும் நடவடிக்கைகள் எமது பிராந்தியத்தில் எவரும் மேற்கொண்டது உண்டா.?

Food Handling Procedure நமது ஊரில் உள்ள உணவகங்களில் நடை முறையில் உள்ளதா..?

இதனை நடைமுறைப்படுத்த ஏதும் செயல் திட்டங்கள் உண்டா..?

அல்லது சுகாதார அமைச்சால் அறிமுகப்படுத்தப் பட்டது உள்ளதா..?

கொத்து ரொட்டி இல் போடப்படும் இறச்சியை அவதானித்து பார்த்துள்ளீர்களா .?

எத்தனையோ நாள் பீரிசரில் இருந்த பூசனம் பிடித்த இறைச்சியை எண்ணெயில் பொரித்து கொடுக்கும் அசிங்கம் அரங்கேறும் உணவகங்கள் எத்தனையோ உண்டு..?

அதுமட்டுமா..?

பூஷணம் (பங்கஸ் )பிடித்த ரொட்டித்துகள்களைத்தான் எத்தனை எத்தனை உணவகங்கள் இன்னும் இன்னும் பயன்படுத்து கின்றன அதற்கான தண்டனைகளை இதுவரையில் நடைமுறைப் படுத்தப்பட்டது உண்டா.?

பொரிக்கும் எண்ணெயில் காபண் படிந்து கறுத்து கரியாகி உள்ளதை அவதானித்து அந்த உணவகங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்த உணவகத்தின் ஒரு கதவாவது இதுவரையில் நிரந்தரமாக மூடப்பட்டது உண்டா..?

நிச்சயமாக எதுவுமே இதுவரையில் நடந்ததில்லை.. சில சில குற்றங்களுக்கு தண்டனைகள் சுகாதார பரிசோதகர்கள் மூலம் வழங்கப்படுகின்றன அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இதற்கான முறையான செயல் மற்றும் நடைமுறைத் திட்டங்கள் இதுவரையில் எந்த எந்த உணவகத்தில் நடைமுறையில் உள்ளன..? நிச்சயமாக வாய்ப்பே இல்லை இதுதான் எனது அனுமானம்..!!

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சுவையூட்டிகள் அஜினமோட்டோ தொடங்கி சோயா சாஸ் வரைக்கும் சிக்கன் ஸ்டாக் தொடங்கி கேச்சாப் வரைக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எத்தனை எத்தனை வகையான சுவை யூட்டிகள் எமது உணவுகளில் பயன்படுத்தப் படுகின்றன இதற்கான அளவுகோல் ஏதும் உண்டா..? சுகாதார அமைச்சு சுவையூட்டிகளுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளதா..?

சல்மணில்லா ஈ கொலாய்டு என்று நோய்க் கிருமிகள் எமது உடலை நாசம் செய்வதை எவ்வாறு நாம் அனுமதிக்க முடியும்..! நோயாளிகள் மலிந்து பெருகிக் காணப்படும் சமூகமாக நாம் மாறிக்கொண்டு வருகின்றோம் என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும்..!

சிந்தியுங்கள் சகோதரர்களே..!!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆரோக்கியமே பெரும் சொத்து..!!
சிந்தித்து செயல்படுத்த எம் சமூகம் என்றுதான் முன்வரும்..( என்னையும் சேர்த்துதான்)
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment