கோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலின் நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு அவசியமானதொன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
பார் வீதியிலிருந்து புகையிரத நிலையம் திரும்பும் சந்தியில் கோவிலுக்கு முன்பாக இருக்கும் முஸ்லிம் உணவகத்தில் ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆலய திருவிழா காலத்தில் இறைச்சிக்கொத்து அங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு இவ்வாறு இறைச்சிக்கொத்து இல்லையென அதில் எழுதப்பட்டுள்ளது.
இப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இனமத பேதமின்றி பலரும் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment