காணாமல் போன பொத்துவில் சிறுமியும் கண்டுகொள்ளாத சமூகமும் !

தன் ஒரே ஒரு பிள்ளையை பறிகொடுத்த ஒரு தாயின் வேண்டுகோள்.
பொத்துவில் மண்மலை வீதியில் வசித்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய நிஜாமுதீன் சமீறா என்ற  மாணவியை கடந்த செப்டம்பர் 05 ஆம் திகதியில் இருந்து காணவில்லை. தேடி கலைத்துப் போன உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை பொலிஸார் மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவிகின்றனர்.
பொத்துவில் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் செய்தி அறிந்தும் அசமந்தம், பெரியபள்ளிவாயல் நிர்வாகம் அதேபோல் பொத்துவில் சமுக செயற்பாட்டாளர்கள்,அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் விடயம் அறிந்தும் இவ் விடயத்தை கண்டுகொள்ளவில்லை.
ஏழை வீட்டு பிரச்சினை என்பதால் இவர்கள் ஏன் என்று கேட்கவிள்ளையா? என்றும் ஆதங்கம்.

சமிபகாலமாக பெண்கள் சிறுவர்கள் காணமல் போவது சம்மந்தமான செய்திகள் சர்வசாதாரணமான விடயமாக சமுகம் நோக்கின்றதா? என்ற கேள்வி எழுவதை இதுபோன்ற கவனிப்பார் அற்ற சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

இக் காணாமல் போன சிறுமியை மீட்பதில் சமுகத்த்தின் சகல அங்கங்களும் கவனம்செழுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இச்சிறுமி காணமல் போன சம்பவம்பற்றி தெரியவருவதாவது
தகப்பனால் கைவிடப்பட்டு தாய் மற்றும் தாயின் பெற்றோரின் அரவனைபில் வாழ்ந்து வந்த குறித்த சிறுமி மூன்று மாதங்களுக்கு முன் தாய் தொழில் நிமிர்தம் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற போது தாயின் பெற்றோரின் பதுகாப்பில் இருந்துவந்துள்ளார்.
சம்பவதினம்கொழும்பில் இருந்து தூரத்து உறவினர்கள் ஓர் இரவு அனாதரவாக அடைக்களம் தேடி வந்த போது தங்கள் வீட்டில் அன்று இரவு தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர் அன்று இரவு குறித்த உறவினர்களுடன் சிறுமியும் உறங்கியுள்ளார். மறுநாள் காலை சிறுமி வழமைபோன்று பாடசாலைக்கு சென்றுள்ளார் ஆனால் பாடசலைக்கு செல்லவுமில்லை சிறுமி  இன்றுவரை வீடு  திரும்பவும் இல்லை.

அதேநேரம் வீட்டில் தங்கி இருந்த உறவினர்கள் அன்று காலை ஊர் செல்வதாக கூறி சென்று உல்லையில் விடுதி ஒன்றில் தங்கி அடுத்த நாள் 6 ஆம் திகதி முதல் இன்றுவரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் இல்லாமல் உள்ளது.
மேலே புகைப்படத்தில் உள்ள இரு பெண்களே  தாயும் மகளும் சம்பவதினம் அவர்களின் வீட்டில் தங்கியவர்கள் இவர்கள்தான் குறித்த சிறுமியை கடத்தி இருக்க வேண்டும் என்று சிறுமியின் குடும்பத்தினர் பலமாக நம்புகின்றனர்.
இவர்கள் கொழுப்பு தெமட்டகொட மினான் பள்ளிக்கு அருகில் உள்ள தொடர்மாடியில் வசித்ததாக கூறப்படுகிறது தாயின்பெயர் பூ நோனா இவர் சம்மந்தமான தகவல்களை 0755709828 என்ற  தொலைபேசியுடாக பெற்றுக்கொள்ளலாம்.
இதே நேரம் 0705759455 என்ற தொலைபேசியில் இருந்து குறித்த சிறுமியை தேட வேண்டாம் என்று எச்சரிக்கும் தொனியில் வட்ஸப்பில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர் குறித்த தொலைபேசி செயற்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களை அடையாளம் காண்பதூடாக இச்சிறுமியை காப்பாற்ற உதவுவதுடன் இச்சிறுமியை கண்டால் கீழ் உள்ள தொலைபேசிக்கு தகவல் தருமாறு சிறுமியின் குடும்பத்தினர் தயவாய் வேண்டுகின்றனர் அத்துடன் இப்பதிவையும் முடியுமானவரை பகிரவும் (செயார்) செய்யவும்
இவரை காண்பவர்கள் 0757067939 றசீனா என்பவருக்கோ, பொத்துவில் பொலிஸ் நிலையம் O63 2248022 எனும் இலக்கத்துக்கோ தகவல் வழங்கவும்.
நன்றி - தீப்பொறி இணையம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment