கார் வைத்திருப்போரே..!! உங்கள் காரின் என்ஜின் சூடானால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?


தகவல் - பாலசுப்ரமணியன்.

பெரும்பாலும் எல்லா கார்களிலும் இன்ஜின் சூடு குறித்த நிலை காட்டும் கருவி இருக்கும். இது பெரும்பாலும் அதிகமான சூட்டிற்கும், அதிகமான குளிருக்கும் இடையே நிற்கும் அப்படி இருந்தால் தான் உங்கள் இன்ஜினில் சரியான சூடு நிலை நிலவுகிறது என அர்த்தம்.

மாறாக அதிகமான சூட்டிலோ, அல்லது அதிகமான குளிரிலோ இன்ஜின் இருந்தால் அது நிச்சயம் நீங்கள் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அவ்வாறாக உங்கள் காரின் இன்ஜின் அதிகமாக சூடானால் என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸை கீழே வழங்கியுள்ளோம்.

01. பானட்டை செக் செய்யுங்கள் 

உங்கள் கார் இன்ஜின் அதிகமாக சூடானால் பானட்டில் இருந்து புகை கிளம்பும், நீங்கள் காரின் சென்று கொண்டிருக்கும் போது இன்ஜின் அதிக சூடாகி புகை வெளியேறினால் காரை பாதுகாப்பான இடத்தில் முதலில் நிறுத்துங்கள்.

பானட்டில் இருந்து அதிக புகை வெளியேறும் போது பானட்டை திறப்பது உங்களுக்கு பாதுகாப்பானது அல்லது. சிறிது நேரம் கழித்து புகைகள் எல்லாம் வெளியேறிய பின் பானட்டை திறக்கவும், அந்த நேரத்திலும் பானட் சூடாக இருக்கும். அதனால் ஒரு துணியை பயன்படுத்தி பானட்டை திறக்கலாம்.

உங்கள் காரில்இருந்து புகை வந்தால் அது ரேடியேட்டரில் லீக் உள்ளது என்று அதர்த்தம் அதை நீங்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும்

02. ஹீட்டரை ஆன் செய்யுங்கள் 

உங்கள் காரில் உள்ள ஏசியில் ஹீட்டர் என்கிற ஆப்ஷன் காரின் இன்ஜினில் உள்ள ஹீட்டை தான் பெற்று தரும். ஆகையால் நீங்கள் ஏசியில் ஹீட்டரை ஆன் செய்யுங்கள் இதனால் விரைவில் இன்ஜினில் உள்ள ஹீட் குறையும்.

03. கூலிங் பேனை செக் செய்யுங்கள் 

கார் இன்ஜினில் அதிக சூடேறாமல் பாதுகாப்பது கூலிங் பேன் தான். அதனால் நீங்கள் கூலிங் பேனை செக் செய்யுங்கள் கூலிங் பேனில் ஏதேனும் சிக்கியிருந்தால் பேன் சுற்றலாமல் இன்ஜின் சூடாகியிருக்கலாம்.

அல்லது கூலிங் பேனில் பியூஸ் போயிருக்கலாம். பியூஸ் போயிருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். இருந்தாலும் கூலிங் பேன் வேலை செய்யாமல் நாம் குறைந்த வேகத்தில் டிராபிக் இல்லாத இடங்களில் வாகனத்தை ஓட்டலாம், டிராபிக் நிறைந்த இடங்களிலும் வேகமாக ஓட்டுவதும் செய்க்கூடாது.

04. கூலண்ட் அளவை சரி பாருங்கள் 

கார் இன்ஜின் ஹீட்டை குறைக்க உதவும் கூலண்டின் அளவை சரி பாருங்கள் நீங்கள் கூலண்ட்டை மாற்ற மறந்திருந்தாலும், இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம்.

கார் இன்ஜின் சூடாக இருக்கும் போது கூலண்டை திறக்க கூடாது. சூடு குறைந்ததும்.திறந்து பாருங்கள் போதிய அளவு கூலண்ட் இல்லை என்றால் அதை மாற்ற வேண்டும்.

கூலண்ட் சுத்தமாக இல்லை என்றால் ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றி அருகில் உள்ள மெக்காணிக் ஷாப் வரை காரை ஓட்டி செல்லலாம்.

05. கசிவுகளை கவனியுங்கள் 

காரின் கூலண்ட், கூலிங் பேன் என எல்லாம் சரியாக இருந்தும் இன்ஜின் அதிகமாக ஹீட் ஆகிறது என்றால் காரின் சில இடங்களில் கசிவுகள் இருக்கலாம். காரை நீங்கள் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நகரும் போது காரில் இருந்து பச்சை நிறத்தில் ஆயில் கசிந்தி நீங்கள் கார் நிறுத்திய இடத்தில் சிந்தியுள்ளதா? என்பதை கவனியுங்கள்.

அவ்வாறு இருந்தால் அந்த கசிவு உள்ள வால்வை சரி செய்ய வேண்டும். அப்பகுதியை செல்லோ டேப் மூலமே, எம் சீல் மூலமோ அப்பகுதியை தற்காலிகமாக அடைத்து விட்டு காரை மெக்கானிகிடம் எடுத்து செல்லலாம்.

06. ரேடியேட்டரை சுத்தமாக வைத்திருங்கள் 

உங்கள் ரேடியேட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உங்கள் ரேட்டியட்டரில் கசடுகள் வருவாகி தடைகள் இருந்தால் இது போன்ற சூடாகும் பிரச்னைகள் வரும்.

இதை நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றால் அந்த பாதிப்பு இன்ஜினிற்கும் சென்று மொத்த இன்ஜினையும் பாழாக்கிவிடும்.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment