ஏழைகளுக்கான இலவச உணவு விநியோகத்தை நிறுத்திக் கொண்ட ஜனபோச பவுண்டேசன்.

கொழும்பு மற்றும் மகரகமை பிரதேச பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் அமைந்த, மிகப் பெறுமதியான காணிகளை விலை கொடுத்து வாங்கி, இந்த வைத்தியசாலைகளுக்கு வரும் ஏழைகளுக்கு இலவசமாக காலை மற்றும் மதிய உணவுகளை ஒரு முஸ்லிம் வள்ளல் வழங்கி வந்தார்.

ஒரு நாளைக்கு சுமார் 3000 உணவு பார்சல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது கடந்த நான்கு வருடங்களாக இந்த மகத்தான பணி நடைபெற்று வருகிறது.

கிளினிக் மற்றும் வாட்டுக்களில் உள்ள மிஸ்மாரிடம் இதற்கான டோக்கன்கள் இருக்கும். அவர்கள் அங்கு வரும் ஏழை நோயாளர்களுக்கு இதனை பகிர்ந்தளிப்பார்கள்.

எனினும் அண்மைக்காலமாக அரசியல் வாதி ஒருவரினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் இனவாத புரளி காரணமாக மேற்படி இலவச உணவு வழங்கும் திட்டத்தை ஜனபோஷ நிறுவனம் நிறுத்திக்கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் பிரபல் எக்ஸ்போ லங்கா ஹாஜியாருக்கு சொந்தமானதென்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment