ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இரும்புச் சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகள்!.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இரும்புச் சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகள்!.

ரத்த ஓட்டக் குறைபாட்டிற்கு முக்கியக் காரணம் இரும்புச் சத்துக் குறைபாடுதான். PLOS Medicine ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில், இரும்புச் சத்துக் குறைபாட்டால் 900 வகையான நோய்த் தொற்றுகள் உண்டாகும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. மேலும் இரும்புச் சத்து சிவப்பு அணுக்களை உருவாக்குவது மட்டுமன்றி இரத்தத்திற்கு தேவையான ஆக்ஸிஜனையும் கொடுக்கிறது. இதற்காகவே தினமும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது என்று ஆய்வு  அறிவுறுத்துகிறது.

இரும்புச் சத்து சிவப்பு அணுக்களை உருவாக்குவது மட்டுமன்றி இரத்தத்திற்கான ஆக்ஸிஜனையும் அளிக்கிறது.

கீரை வகைகள்: 

குறைந்த கலோரிகள் இருந்தாலும் 100 கிராம் கீரையில் 3.6 மில்லி கிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இதோடு வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் போன்றவையும் அதிகமாக உள்ளன.

பருப்பு வகைகள்: 

பீன்ஸ், கொண்டைக் கடலை, பட்டாணி , சேயா பீன்ஸ் போன்றவை அதிக இரும்புச் சத்து கொண்டவை. 200 கிராம் பருப்பு வகைகளில் 6.6 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளன. அதுமட்டுமன்றி நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. உடல் எடை குறையவும் உதவும்.


பூசணி விதைகள்: 

28 கிராம் பூசணி விதையில் 4.2 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. வைட்டமின் K ஸிங்க் , மெக்னீசியம் ஆகியவையும் உள்ளன.

திணை: 

இவற்றை ஆங்கிலத்தில் சூப்பர் ஃபுட் என்று அழைப்பார்கள். 185 கிராம்  திணை வகைகளில் 2.8 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.


புரக்கோலி -

156 புரக்கோலியில் 1 மில்லி கிராமுக்கு அதிகமாக இரும்புச் சத்து உள்ளது. வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment