ஹபாயா தொடர்பில் புத்தளம் நகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்.


அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லை புத்தளத்தில் தீர்மானம்.

புத்­தளம் மாவட்­டத்தில், பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் ஏனைய அரச திணைக்­க­ளங்­களில் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆலோ­சிக்கும் இரண்டாம் கட்ட கலந்­து­ரை­யாடல் நேற்று முன்­தினம் புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ.பாயிஸ் தலை­மையில் புத்­தளம் நகர மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

ஏற்­க­னவே இம்­மாதம் 09ஆம் திகதி சுமார் 15 சட்­டத்­த­ர­ணி­களை ஒன்­றி­ணைத்து புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ.பாயிஸின் தலை­மையில் புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல், ஜம்­இய்­யதுல் உலமா புத்­தளம் கிளை ஆகி­ய­வற்­றினால் நடாத்­தப்­பட்ட முதற்­கட்ட செய­ல­மர்வில் அரச திணைக்­க­ளங்­களில் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் குறிப்­பாக, அபாயா தொடர்­பான பிரச்­சினை தொடர்­பா­கவும் விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தோடு, சட்­டத்­த­ர­னி­களால் பல்­வேறு ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த இரண்­டாம்­கட்ட கலந்­து­ரை­யா­ட­லா­னது  முதற்­கட்­ட­மாக குழு­நிலை கலந்­து­ரை­யா­ட­லாக பழைய நகர மண்­ட­பத்­திலும் பின்னர் அதற்­கான தீர்­வு­களை வழங்கும் கூட்டம் புதிய நகர மண்­ட­பத்­திலும் நடை­பெற்­றன.

இந்­நி­கழ்வில் புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ. பாயிஸ், புத்­த­ளத்தின் மூத்த சட்­டத்­த­ர­ணி­க­ளான அப்துல் காதர், எம்.எம். இக்பால் உட்­பட சட்­டத்­த­ர­ணி­க­ளான ஏ.எம்.கமர்தீன், ஏ.எம். சம்சுர் ராபி, எம்.ஐ.ஹிஸ்மி, ரம்சான் மற்றும் நகர சபை உறுப்­பி­னர்கள், வர்த்­தக சங்­கத்­தி­னரும் கலந்து கொண்­டனர்.

இதன்­படி முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லையென்றும், தேவையேற்படின் நீதிமன்றம் செல்லவும் தயார் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
-Vidivelli


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment